முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து ஹால்டியா துறைமுகம் சென்ற இழுவை கப்பல்! 

ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து ஹால்டியா துறைமுகம் சென்ற இழுவை கப்பல்! 

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து ஹால்டியா துறைமுகம் சென்ற இழுவை கப்பல்

Pamban Bridge | ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்குபாலத்தினை கடந்து கோவாவில் இருந்து மேற்குவங்காளம் ஹால்டியா துறைமுகம் இழுவை கப்பல் ஒன்று சென்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

பாம்பன் ரயில் தூக்குபாலத்தினை கடந்து கோவாவில் இருந்து மேற்குவங்காளம் ஹால்டியா துறைமுகம் சென்றது ஒரு இழுவைப் கப்பல், அதனைத் தொடர்ந்துஒன்றன்பின் ஒன்றாக தெற்கில் இருந்து வடக்கு நோக்கிமீன்பிடி விசைப்படகுகள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்குப் பாலமானது, ராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பயண நேரத்தை குறைப்பதற்கும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும், பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்லும் கப்பல்கள்

இந்நிலையில்,கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், கோவாவில் இருந்து இழுவை கப்பல் ஒன்று மேற்கு வங்காளம் ஹால்டியா துறைமுகம் செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், துறைமுக அதிகாரிகள் அனுமதி தராததால் கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத் தொடர்ந்து, கப்பல் தூக்குபாலத்தினை கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்ததால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இழுவைக்கப்பல் பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டு மேற்குவங்காளம் கால்டியா நோக்கி சென்றது. இதனைத் தொடர்ந்து, மீன்பிடி விசைப் படகுகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மண்டபம் வடக்கு பகுதி துறைமுகத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றன.

    First published:

    Tags: Local News, Ramanathapuram