ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடி பத்தினி அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் திருட்டு.. பூஜை செய்ய வந்த பூசாரி அதிர்ச்சி!

பரமக்குடி பத்தினி அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் திருட்டு.. பூஜை செய்ய வந்த பூசாரி அதிர்ச்சி!

X
அம்மன்

அம்மன் நகை கொள்ளை

Paramakudi amman jewels stole | ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிகாலையில் பத்தினி அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒன்றரை சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

பரமக்குடியில் அதிகாலையில் பத்தினி அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒன்றரை சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு எதிராக மூலவாணியர் தெருவில் பத்தினி அம்மன் மற்றும் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக வடிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் பூசாரி பக்கத்து அறையில் சுவாமிகளுக்கு நெய்வேத்தியம் தயார் செய்து கொண்டிருந்தார், அப்போது கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பத்தினி அம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கழுத்தில் அணியப்பட்டிருந்த சுமார் ஒன்றரை சவரன் தங்க நகையை லாவகமாக திருடு சென்றுள்ளனர்.

பூசாரி நெய்வேத்தியம் தயார் செய்து முடித்து விட்டு சுவாமிக்கு பூஜை செய்யும்போது கழுத்தில் இருந்த நகையானது காணாமல் போனதை கண்டு பூசாரி வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக பரமக்குடி டவுன் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் பூசாரியின் புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் இருக்கும் போதே அம்மன் கழுத்தில் இருந்த நகையானது திருடுபோனது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Gold Theft, Local News, Paramakudi Constituency, Ramanathapuram