ராமநாதபுரம் அருகே செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை உடைத்து விழுந்ததில் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி,கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது கட்டிடம். இன்று காலையில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்த போது பள்ளியின் வெளிப்புற முகப்பு பகுதியில் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறிக் கொண்டு வகுப்பறைவிலிருந்து வெளியே வர முயன்ற போது வகுப்பறைக்குள் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்ததுள்ளது. எந்தவொரு பாதிப்பும் இன்றி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக நூல்இலையில் உயிர் தப்பி உள்ளனர்.
மேலும் பள்ளியின் நான்கு புறங்களிலும் உள்புற பகுதிகளிலும் கட்டிடங்கள் விரிசலுடன் சிதலமடைந்துள்ளதால்எந்நேரமும் இடிந்து விளக்கூடும் என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் இருக்கவும் கல்வி பயிலவும் அச்சமடைந்துள்ளனர்.
சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள தரமற்ற அரசு பள்ளி கட்டிடத்தினை அகற்றி விட்டு மாணவர்களுக்கு புதிய கட்டிடம் அமைத்து எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government school, Local News, Ramanathapuram, Ramnad, School students