ஹோம் /ராமநாதபுரம் /

தெலங்கானா மூதாட்டி காலில் ஏறிய ராமேஸ்வரம் கோயில் தங்கதேர் சக்கரம்..

தெலங்கானா மூதாட்டி காலில் ஏறிய ராமேஸ்வரம் கோயில் தங்கதேர் சக்கரம்..

மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

Ramanathapuram District News : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தங்கத் தேரின் சக்கரம் காலில் ஏறியதில் மூதாட்டி பாதிக்கப்பட்டுள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி 12 வருடங்களுக்கு பிறகு தேரானது புதுப்பிக்கப்பட்டு ராமநாதசுவாமி திருக்கோவில் மூன்று பிரகாரத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் மேற்கொண்டனர்.

இதையடுத்து, அன்றில் இருந்து தினந்தோறும் மாலை நேரத்தில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இன்று கார்த்திகை அமாவாசை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஜகிஜான் மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு தங்ததேருடன் சுற்றி வந்துள்ளனர்.

இதையும் படிங்க : “வாழவே வழியில்லை.. உயிரை பணயம் வைத்து வந்தோம்” - இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 10 ஈழ தமிழர்கள் குமுறல்..

அப்போது, ராஜமணி என்ற மூதாட்டி காலில் தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கோவில் முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்பு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram