முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம் 

ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம் 

X
மூன்று

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி தொகுப்பூதிய செவிலியர்கள் ராமநாத

Ramanathapuram News : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் ஒன்றினைந்து 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிப்படைந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய செவிலியர்களாக 40 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த செவிலியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியமானது தாமதமாக வழங்கப்படுவதாகவும், இம்மாதம் இதுவரையில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மாதத்தின் முதல்நாளே ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்று தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசானது கடந்த 2021 ஆம் ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதசம்பளமாக ரூ.18,000 மாதாந்திர இன்கிரிமெண்டாக ஜந்து சதவீதம் வழங்கப்படும் எனவும் அரசானை வெளியிடப்பட்டது, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், கடந்த பத்து மாதங்களாக ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் பணத்தை செவிலியர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது, இதில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகவும், உடனடியாக பிஎஃப் பணத்தை தங்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராமநாதபுரத்தில், செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் போதிய உதவி கிடைக்காமல் பாதிப்படைந்தனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram