Home /ramanathapuram /

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கிய சிறுமி!

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கிய சிறுமி!

சைக்கிள்

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கிய சிறுமி.

இலங்கைக்கு நிவாரணமாக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய கோபிகா ஸ்ரீ சிறுமியை வருவாய் கோட்டாட்சியர் பாராட்டினார்.

    பரமக்குடியில் 8 வயது சிறுமி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாக்கியம் - கவிதா. இவர்களின் எட்டு வயது மகள் கோபிகா ஸ்ரீ தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக சைக்கிள் வாங்குதற்காக சிறுமி உண்டியலில் பணம் சேமித்து வைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த 2022 ரூபாயை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகனிடம் வழங்கினார்.

    இலங்கைக்கு நிவாரணமாக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய கோபிகா ஸ்ரீ சிறுமியை வருவாய் கோட்டாட்சியர் பாராட்டினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி