Home /ramanathapuram /

ராமேஸ்வரம் கோவிலைச் சுற்றி உள்ள உணவகங்களில் ஆய்வு- கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

ராமேஸ்வரம் கோவிலைச் சுற்றி உள்ள உணவகங்களில் ஆய்வு- கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

உணவு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

Ramanthapuram | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலைச் சுற்றியுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலை சுற்றியுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி, தரமற்ற உணவுகளை விற்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

சோதனையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள நடைபாதையில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானமாக வழங்குவதற்காக உணவு பொட்டலங்கள் பார்சல் செய்து விற்கின்றனர். இவ்வாறு விற்கப்படும் பார்சல் உணவுகளை வாங்கி அவற்றை வயதானவர்கள் மற்றும் யாசகம் பெறுபவர்களுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது.

சோதனையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி


இதையடுத்து இந்த உணவுகள் தரமற்ற முறையில் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

சோதனையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி


இதனையடுத்து, இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலை சுற்றி நடைபாதை ஒரத்தில் விற்கப்படும் உணவு கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு பின்னர் தரமற்ற உணவுகளை விற்கப்பட்டால் அபதாரம் விதிக்கப்படும் என நடைபாதை கடைகளை எச்சரித்து சென்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி