முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் - பின்னணி இதுதான்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் - பின்னணி இதுதான்!

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Rameshwaram | மீனவர்களையும் விசைப்பபடகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள்  ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு, சில தீர்மானங்கள் வழியுறுத்தி கோசங்களை  எழுப்பினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் பிரதானமாக விளங்குவது மீன்பிடித்தல் தொழில், இதில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்,

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி மீன்பிடிக்க சென்று கட்சதீவிற்கும் நெடுந்திருக்கும் இடையே மீன் கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்து 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்,

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் நவம்பர் 9-ம் தேதி வரை சிறையில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதை கண்டித்து வியாழக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க : பசும்பொன் தேவர் ஜெயந்தி : சென்னை கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணிப்பு – சைலேந்திர பாபு தகவல்

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட விசைப்படகையும் 7 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இலங்கை அரசால் பரிந்துரை செய்யப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும், விடுபட்ட படகுகளுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். 2019 முதல் 2022 வரை பிடிபட்டு படகுகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் , தங்கச்சிமடம் வலசை தெருவில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது,

மேலும், இலங்கைக்கு கடற்படை தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை கைது செய்வதை மாநில அரசும், மத்திய அரசும் கண்டுக்கொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, மீனவ சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், மீனவர்கள், மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Ramnad