ஹோம் /ராமநாதபுரம் /

குழந்தைகள் தினத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து பெற்ற குழந்தைகள் 

குழந்தைகள் தினத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து பெற்ற குழந்தைகள் 

மாவட்ட ஆட்சியர் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து பெற்ற குழந்தைகள் 

மாவட்ட ஆட்சியர் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து பெற்ற குழந்தைகள் 

குழந்தைகள் தினத்தன்று பள்ளி குழந்தைகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து பெற்று சென்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் தனியார் பள்ளி குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து பெற்று சென்றனர்.

  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீது அவர் கொண்ட அன்பால் அவரின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் 40 பேர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அவர்களை நேரில் சந்தித்து மலர் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

  Also Read: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி அகும்பே பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? டிரீப் செல்ல சரியான நேரம் இதுதான்..!

  இந்நிலையில், குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து கூறிய ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் அவர்களுக்கு பேனா மற்றும் சாக்லேட் கொடுத்து நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார். இதனால் குழந்தைகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து சென்றனர்.

  செய்தியாளர் : மனோஜ் குமார் ( இராமநாதபுரம்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Children's Day, Local News, Ramanathapuram