Home /ramanathapuram /

480 ஆண்டு கால பழமை: மும்மதத்தினருக்கும் வணங்கும் புனித சந்தியாகப்பர் ஆலயம் பற்றித் தெரியுமா?

480 ஆண்டு கால பழமை: மும்மதத்தினருக்கும் வணங்கும் புனித சந்தியாகப்பர் ஆலயம் பற்றித் தெரியுமா?

சந்தியாகப்பர்

சந்தியாகப்பர் ஆலயம்

ராமேஸ்வரம் தீவு பகுதி அனைத்து மதத்தினரும் வணங்கும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும்  தங்கச்சிமடம் வேர்க்காடு   புனித சந்தியாகப்பர் ஆலயம் இதன் வரலாற்று சிறப்புகளை காண்போம்

ராமேஸ்வரம் தீவு பகுதியில் அனைத்து மதத்தினரும் வணங்கும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. அதன் வரலாற்று சிறப்புகளை காண்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம்.

இந்த ஆலயத்தின் முகப்பானது மும்மதத்தினரையும் குறிக்கும் வகையில் முகப்பு வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவில் கலந்து கொண்டு நாம் ஒன்றை நினைத்து நேர்த்திகடன் செய்தால் அடுத்தாண்டு திருவிழாவிற்குள் அது நிகழ்ந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

பிள்ளை இல்லாத தம்பதிகள், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாட்கள் கை, கால் வழி உடையோர், திருவிழா நாட்களில் நேர்த்திக்கடன் இருந்து செல்வர். அடுத்தாண்டு திருவிழாவிற்குள் அவை சரியாகி விடும் என்று கூறுகின்றனர் பக்தர்கள்.

இதையடுத்து, ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு திருவிழா நடைபெறும். இதனால் இந்த ஆலயமானது மதநல்லிணக்கத்திற்கு சிறந்த ஆலயமாக விளங்குகிறது.

ஆலயம் உருவான வரலாறு

16- ம் நூற்றாண்டில் நற்செய்தி புதிப்பிற்காக ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த புனித சவேரியார் 1842-ம் ஆண்டு பனை ஓலை வைத்து இயேசுவின் நெருங்கிய உறவினரான புனித சந்தியாகாப்பருக்கு ஆலயம் கட்டினார்.

பனை ஓலையை வைத்து கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் வேண்டுவதெல்லாம் நடைபெற்றதால் அனைத்து மதத்தினரும் வந்து வேண்டும் தலமாக மாறி உள்ளது. மூன்று மதத்தினரும் சங்கமைக்கின்ற இடமாகவும் உள்ளது.

போர்ச்சுகீசியர் காலத்தில் பனை ஓலையில் அமைந்திருந்த இந்த ஆலயத்தை அப்போது இருந்த கிறிஸ்தவ மக்கள் கற்கள் வைத்து அமைத்து கட்டியுள்ளனர்.

புனித சந்தியாகப்பர் ஆலயத்துக்கான கூகுள் மேப்:


இதையடுத்து, 1991-ம் ஆண்டு கற்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இடிக்கப்பட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின்பு 1993- ல் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து வந்து பிராத்தனை செய்கின்றனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்டு பல சிறப்புகளை கொண்ட 480 ஆண்டுகள் கடந்த மதநல்லிணக்க ஆலயமாக இந்த திருத்தலம் தங்கச்சிமடம் பகுதியில் விளங்குகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி