Home /ramanathapuram /

Ramanathapuram : அதிசய வில்லூண்டி தீர்த்தம்.. கடல் நீருக்கு நடுவே உள்ள நன்னீர் ஊற்று குறித்த வரலாறும், சிறப்புகளும்..

Ramanathapuram : அதிசய வில்லூண்டி தீர்த்தம்.. கடல் நீருக்கு நடுவே உள்ள நன்னீர் ஊற்று குறித்த வரலாறும், சிறப்புகளும்..

வில்லூண்டி

வில்லூண்டி தீர்த்தம்

Villoondi Theertham : வில்லூண்டி தீர்த்த பாலம் சேதமடைந்து எப்போதும் வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்து பராமரிக்க சுற்றுலா பயணிகள் வேண்டுகோள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தங்கச்சிமடம் அருகே இந்த வில்லூண்டி தீர்த்தம் அமைந்துள்ளது. கடல் நீர் சூழ அதிசய கிணறு ஒன்று உள்ளது. இந்த தீர்த்த கிணறை சுற்றி கடல்நீர் இருந்தாலும் கிணற்றில் இருந்து கிடைக்கும் நீர் உப்பில்லாத இனிப்பான நீராகவே இருக்கும்..

இதற்கு பின்பு இராமாயணம் வரலாறு ஒளிந்துள்ளது, ராமபிரானால் உருவாக்கப்பட்டது இந்த அபூர்வ தீர்த்தமாகும். ராவணனை வதம் செய்து கொன்ற பிறகு ராமன் சீதா தேவியை மீட்டு இலங்கையிலிருந்து வந்தபோது இந்த இடத்தில் சீதா தேவிக்கு தாகம் எடுத்தால் ராமபிரானிடம் கூறவே சுற்றி கடல்நீர் இருந்ததால் அங்கு உப்புத் தண்ணீரை தவிர வேறு எதுவும் இல்லை.

இதையடுத்து, ராமபிரான் கங்கா தேவியை வேண்டி கடலை நோக்கி அம்பை எய்தினார் உடனே அந்த இடத்தில் கங்கை நீர் வர தொடங்கியது. இந்த கங்கை நீரை சீதாதேவி அருந்திய பிறகு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் கங்காதேவி அங்கேயே இருக்கும்படி வேண்டினார்.

வில்லூண்டி தீர்த்தம்


அதிலிருந்து அன்று முதல் இன்றுவரை அங்கு நன்னீர் கிடைக்கிறது உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அந்த நீரை சுவைத்து புண்ணியம் பெறுகின்றனர் இவ்வாறு வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது இந்த தீர்த்தமாகும்.

இந்த பாலமானது கடலில் இருந்து 15 அடி தூரத்தில் அமைந்துள்ளது 2010-ம் ஆண்டு சுற்றுலா துறையின் சார்பாக நிறுவப்பட்டது. கடல் அரிப்பு காரணமாக ஆங்காங்கே சேதமடைந்து தற்போது இடிந்து விடும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனை பகுதியில் உள்ள மக்கள் சிறிது பணம் வசூல் செய்து முடிந்த அளவு இந்த பாலத்தை பராமரிப்பு செய்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் மீண்டும் அந்த பாலம் கடல்நீர் அரிப்பு காரணமாக சற்று கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைகிறது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றன ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

வில்லூண்டி தீர்த்தம்


ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து வில்லூண்டி தீர்த்தம் செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..

Villondi Theertham
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி