Home /ramanathapuram /

சேதமடைந்தநிலையில் தங்கச்சிமடம் புயல் காப்பக கட்டிடம்... குழந்தைகள் மீது இடிந்து விழும் அபாயம்- தீர்வு எப்போது

சேதமடைந்தநிலையில் தங்கச்சிமடம் புயல் காப்பக கட்டிடம்... குழந்தைகள் மீது இடிந்து விழும் அபாயம்- தீர்வு எப்போது

சேதமடைந்த

சேதமடைந்த நிலையில் புயல் காப்பகம்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர் நகர்பகுதியில் இருக்கும் புயல் காப்பகம் கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருக்கும் புயல் காப்பகம் கட்டிடம் சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ளது. இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் அதை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான குடும்பங்கள், மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவ்வாறு மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களின் குடிசைகள் புயல் காற்று வீசும் போது சேதமடைந்தது.

சேதமடைந்த நிலையில் கட்டிடம்


1978-ம் ஆண்டு வீசிய புயலில் மீனவர்களின் வீடுகள் கடுமையாக சேதமடைந்து இப்பகுதி மக்கள் கோவில்களில் தங்க வைக்கப்பட்டனர். உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டனர்.

சேதமடைந்த நிலையில் கட்டிடம்


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அந்த ஆண்டே புயல், சூறாவளி, மழை போன்ற இயற்கை பேரிடரின் போது மீனவர்களை தங்க வைக்க தமிழக அரசால் பாம்பன், தங்கச்சிமடம், கீழக்கரை, தொண்டி போன்ற 9 இடங்களில் பேரிடர் மீட்பு கட்டிடமாக ‘புயல் காப்பகம்’ கட்டப்பட்டது.

சேதமடைந்த நிலையில் கட்டிடம்


தங்கச்சிமடம் பகுதியில் கட்டப்பட்ட இந்த புயல் காப்பகமானது கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சேதமடைய தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில், சிறிது சிறிதாக இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது இக்கட்டிடம். இரவு நேரங்களில் குடிமகன்களின் மது அருந்தும் பார் ஆக விளங்கி வருகிறது.

சேதமடைந்த நிலையில் கட்டிடம்


இந்த புயல் காப்பகத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி குழந்தைகள் வீடுகளின் அருகே விளையாடுகின்றன. ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள புயல் காப்பக கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

மழை மற்றும் காற்று வீசும் போது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பக்க சுவர்கள் அவ்வப்போது உடைந்து விழுகின்றது. கடந்த வாரம் ஒரு வளர்ப்பு ஆட்டின் மீது இடிபாடுகள் விழுந்தது.

பெரும் விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன் புயல் காப்பகம் கட்டிடத்தை, இடித்து அப்புறப்படுத்திவிட்டு, மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இந்த இடத்தை மாற்றித்தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி