ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள சந்தியாயாகப்பர் தேவாலயத்தில் மும்மதத்தினரும் கொண்டாடும் திருவிழா தேர் பவனியில் மும்மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள 480 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தூய சந்தியாகப்பர் தேவாலயத்தில் கிறிஸ்துவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பங்கேற்கும் மதநல்லிணக்க விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இதையடுத்து, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. புனித சந்தியாகாப்பர் ஆலயத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தியாகாப்பர் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி சப்பரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஆலயத்தை சுற்றி வந்தது.

மதநல்லிணக்க தேர்பவனி திருவிழா..
இந்த ஆலயத்தில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட உடல் சுகம் இல்லாத நோயாளிகள் 10 நாட்களாக தங்கி பிரார்தனை செய்தால் நோயிலிருந்து மீள்வதாக நம்பிக்கை இன்றளவும் தொடர்கிறது. இதனால் இந்த தேவாலயத்தில் மும்மதங்களின் வழிபாட்டு முறையில் இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது.

மதநல்லிணக்க தேர்பவனி திருவிழா.
இந்த விழாவில் சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி, கேரளா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மதம், இனம், மொழி வேறுபாடின்றி கலந்துகொன்டனர்.

மதநல்லிணக்க தேர்பவனி திருவிழா.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இத்திருவிழாவில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர், கோவிலை சுற்றி 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்கச்சிமடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

திருவிழாவில் குவிந்த பக்தர்கள்
அதிகாலை திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று அதன் பிறகு மாலை கொடி இறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.