ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு மாரியம்மன் கோவில் தெருவில், மீன்பிடி தொழில் செய்யும் மீனவ மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1964-ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலுக்கு பின் ஒவ்வொரு பகுதியாக இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடிபெயர்ந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை மணல் மேடுகள் தான் இப்பகுதி மக்களின் சாலையாக உள்ளது.
இதில் இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு செல்ல இயலாது சூழல் உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாமல் கடந்த வாரம் மூதாட்டி ஒருவரை கட்டிலில் வைத்து மணல் மேடுகளில் தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ, மாணவிகள் மணலில் கடந்து செல்வதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆவதால் ஒருகிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடம், பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், ஊராட்சி மன்றத்தில் நிதி இல்லை, என்று கூறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஓட்டு போடும்போது மட்டும் செய்து தருகிறோம் என்று கூறிவிட்டு அதன்பிறகு இப்பகுதிக்கு வந்து பார்ப்பது கூட கிடையாது என்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உடல் சரியில்லை என்றால் கூட அவர்களை தூக்கி கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சிலர், வயதானவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்வதற்குள் இறந்தும் உள்ளனர், எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம், சாலை வசதியாவது மட்டும் ஏற்படுத்தி தரவும், எங்களின் தலைமுறைக்காவது சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram