Home /ramanathapuram /

தார் ரோடு போடுங்க சார்.. குண்டும் குழியுமான சாலையால் அவதிப்படும் தங்கச்சிமடம் மக்கள்..

தார் ரோடு போடுங்க சார்.. குண்டும் குழியுமான சாலையால் அவதிப்படும் தங்கச்சிமடம் மக்கள்..

தங்கச்சிமடம்,

தங்கச்சிமடம், ராமநாதபுரம் மாவட்டம்

Ramanathapuram Latest News : கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மழையால் சேதமடைந்த தங்கச்சிமடம் சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் கற்கள் பேர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதிய சந்தியாகப்பர் கோவில் செல்லும் அய்யன் தோப்பு சாலையானது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெய்த மழையில் சேதம் அடைந்து தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

இங்கு ஒரு தனியார் மகளிர் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களில் வரும்போது தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர், சாலையில் சிறிது தூரம் செம்மண் சாலையாக உள்ளதால், மழை பெய்யும் போது பொதுமக்கள் நடந்து செல்லும் போது வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதிவாசி ஜான்போஸ் கூறுகையில்:-

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் சாலை முற்றிலும் சேதம் அடைத்தது. இந்த சாலையை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை இது சம்பந்தமாக மனு கொடுக்கப்பட்டது.

ஊராட்சி நிர்வாகம் எங்களிடம் கூறியதாவது இந்த சாலை நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைக்கப்பட்டது என்று ஆனால் மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறையில் விசாரித்த போது நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலை நெடுஞ்சாலை துறையின் கீழ் இல்லை என்று கூறுகின்றனர். அப்போ இந்த சாலை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று குழப்பமே எங்களுக்குள் உள்ளது.

யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தால் என்ன நல்லதுக்காக சாலை வசதி ஏற்படுத்தினால் என்ன தவறு ஏற்பட போகிறது என்றார், தனியார் மகளிர் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு தான் செல்கின்றனர். மழை பெய்தால் சாலை முழுதும் சேரும் சகதியுமாக ஆகிவிடுகிறது. கால்வைக்கும் இடமெல்லாம் வழுக்கும் அழவுக்கு மோசமாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சாலையை யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்று ஆய்வு செய்து எங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் எங்களது பொதுமக்களே பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி