முகப்பு /ராமநாதபுரம் /

தலைமன்னார் டூ தனுஷ்கோடி.. 30 கிமீ கடலில் நீந்தி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!

தலைமன்னார் டூ தனுஷ்கோடி.. 30 கிமீ கடலில் நீந்தி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!

X
தலைமன்னார்

தலைமன்னார் டூ தனுஷ்கோடி கடல் பகுதியை முதன் முதலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்த

Success Story : இவரால் பேசவோ தானாக தனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இருகால்களும் செயலிழந்த நிலையில் இருப்பதால் அந்த கால்களுக்காக நான்கு வயது முதல் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளார் ஸ்ரீராம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்கிற மாற்றுத்திறனாளி நீச்சல் வீரராவார். இவர் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் – வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ் (29). இவர் சிறு சிறுவயதிலேயே மன வளர்ச்சி குன்றியவராகவும் இரு கால்களும் செயலிழந்த நிலையில் "செரிபரல்பாஸி" என்ற பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இவரால் பேசவோ தானாக தனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இருகால்களும் செயலிழந்த நிலையில் இருப்பதால் அந்த கால்களுக்காக நான்கு வயது முதல் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

இவருக்கு, "ஸ்பெரஸ்ட ஸ்ட்ரோக்" முறையில் நெஞ்சை அசைத்து நீந்தும் முறையில் கற்றுக்கொடுக்க தொடங்கினர். நீச்சலில் இவர் கொண்ட ஆர்வத்தினால் இவரின் பெற்றோர், இவரை ஒரு நீச்சல் வீரராக்க வேண்டும் என்று முயற்சித்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளனர். மேலும், இவர் கடலூர் - பாண்டிச்சேரி இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் தேசிய விருது பெற்றுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியினை நீந்தி சாதனை புரிய நேற்று காலை 11மணி அளவில் தலைமன்னாருக்கு அவரது குழுவினருடன் புறப்பட்டார்.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணி அளவில் தலைமன்னாரிலிருந்து நீந்ததொடங்கிய இவர் தனுஷ்கோடிக்கு இன்று மதியம் 1:30 மணிக்கு வந்தடைந்தார். இவர், 20 மணிநேரம் 20 நிமிடங்கள் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

நீச்சல் அடிப்பவர்கள் கை, கால்களை அசைத்து ப்ரிஸ்டைல் முறையில் நீந்துவார்கள், ஆனால் இவர் கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் நெஞ்சை அசைத்து "ஃப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்" முறையில் நீந்திய முதல் மாற்றுத்திறனாளி என்ற உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு யுனிவர்சல் புக்ஆப் ரெகார்ட்ஸ்க்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

First published:

Tags: Physically challenged, Rameshwaram