ஹோம் /ராமநாதபுரம் /

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தை அமாவாசை நாளான நாளை பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

நாட்டின் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்நிலையில், தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாைசயையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram