ஹோம் /ராமநாதபுரம் /

தேவர் குருபூஜை 2022: பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள் - தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்

தேவர் குருபூஜை 2022: பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள் - தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்

தேவர் குருபூஜை

தேவர் குருபூஜை

Pasumpon Muthuramalinga Thevar Gurupoojai 2022 : ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா வரும் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி இரவு விழாவாக நடைபெற உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

பசும்பொனில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா வரும் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி இரவு விழாவாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும் படிக்க:  வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

இதனைதொடர்ந்து, கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் 5 டிஐஜி, 28 எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம்

இதையடுத்து, தேவர் குருபூஜைக்கு பத்தாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 13 ட்ரோன் கேமிரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகள்

இந்நிலையில், தேவரின் குருபூஜை விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என்றும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது, பேருந்துகள் அமர்ந்து அமைதியாக பயணிக்க வேண்டும் என தென்மண்டல ஐஜி தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Muthuramalinga Thevar, Ramanathapuram, Thevar Jayanthi