Home /ramanathapuram /

மாலை.. மிட்டாய்.. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்..

மாலை.. மிட்டாய்.. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்..

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Ramanathapuram District: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளியின் நுழைவு வாயிலில் வைத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள்  இனிப்புகள் வழங்கி, மாலை அணிவித்து வரவேற்றனர். இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு சரியாக ஜூன் மாதம் ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று துவங்கியது.

    ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளியின் நுழைவு வாயிலில் வைத்து ஆசிரியர்கள் மாலை அணிவித்து, ரோஜா பூக்கள் கொடுத்தும்,  குழந்தைகளுக்கு பிடித்த  தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் உள்ளிட்ட மிட்டாய் வகைகளையும் வழங்கி பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்றனர்.
    இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் உற்சாகமடைந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை இவ்வாறு  வரவேற்றது  மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    புதிய பள்ளி சீருடையில், புதிய புத்தக பையுடன் வந்த மாணவர்கள் தங்களது  வகுப்புகளுக்கு ஆர்வத்துடன் சென்றனர். பள்ளி வந்த மாணவர்களுக்கு இன்று, முதல் நாள் என்பதால் பாடம் நடத்தாமல் புத்துணர்வு வகுப்புகள் நடத்தவும் இந்த வகுப்புகள் ஒரு வாரம் நடத்தலாம் என்றும் இதனால் மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கும் வகையில் அமையும் என மாநில கல்வித்துறை அறிவுறுத்தியதன் அடிப்படையில் பள்ளியில் இன்று புத்துணர்வு முகாம் பயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி