ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | இரவோடு இரவாக டாஸ்மாக் கடையை உடைத்து 100-க்கும்‌ மேற்பட்ட மதுபாட்டில்கள் திருட்டு

ராமநாதபுரம் | இரவோடு இரவாக டாஸ்மாக் கடையை உடைத்து 100-க்கும்‌ மேற்பட்ட மதுபாட்டில்கள் திருட்டு

X
திருடப்பட்ட

திருடப்பட்ட கடை

Ramanathapuram | ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி மதுபானக் கடையின் பூட்டை இரவோடு இரவாக உடைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். விற்பனையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணியில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்றுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதியினர் அந்த வழியாக செல்லும் போது கடையின் பூட்டு உடைத்திருப்பதை பார்த்து கடையின் விற்பனையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மதுபான பாட்டில்கள் 

இந்நிலையில், விற்பனையாளர் வந்து அங்கு பார்த்தபோது அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை திருடிச்சென்றது தெரிய வந்தது.

உடைக்கப்பட்ட கடை

இதனைத்தொடர்ந்து, கடை விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பரமக்குடி வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மூழ்கி பலி

இதையடுத்து, நேற்று இரவு கடையின் விற்பனையை முடித்துவிட்டு கடையை அடைத்து விட்டு சென்றாக விற்பனையாளர் கூறினர். பின்பு கைரேகை நிபுணர்களை வரவைத்து கை ரேகையை பதிவு செய்து திருடர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram