முகப்பு /ராமநாதபுரம் /

தமிழ்நாடு பட்ஜெட் : ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்.. 

தமிழ்நாடு பட்ஜெட் : ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்.. 

X
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் : ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்

Ramanathapuram District News | தமிழ்நாடு பட்ஜெட் 2023ல் மீனவர்கள் எதிர்பார்த்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாட்டில் 2023-2024ம் நிதிஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 20ம் தேதி சட்டசபையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2வது முழு பட்ஜெட்டாகும். இந்த நிதிநிலை அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கோரிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மீனவர்களுக்கு தடைகாலத்திற்கும் வழங்கப்படும் ரூ.6000 திட்டத்திற்கு மட்டும் ரூ.389 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு அறிக்கைவிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த எந்த திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்றும், புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இது மீனவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுப்பதால் மீனவர்கள் இந்தாண்டு பட்ஜெட்டை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி... 

மேலும், மீனவர்களுக்கு பட்ஜெட் ஒதுக்கப்படும்போது ரூ.1500 கோடி வரையில் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் ரூ.389 கோடி‌மட்டும் ஒதுக்கியுள்ளதை மீனவர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்தெந்த பயன்பாட்டிறகாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, TN Budget 2023