தமிழ்நாட்டில் 2023-2024ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ம் தேதி சட்டசபையில் தாக்குதல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் 3வது நிதிநிலை அறிக்கையாகும். இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் முன்வைத்துள்ள சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்கின்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “60 வயதினை கடந்த மீனவர்களுக்கு, சொசைட்டி பணம் என்ற மீன்பிடி தடைக்கால நிவாரணநிதி தருவது கிடையாது. 60 வயதில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருக்கின்றனர். மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க 2007ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை ஓய்வூதியம் வழங்குவதில்லை. மீனவர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாம்பன் வடக்கு கடற்கரை துறையில் சூறைக்காற்றினால் படகுகள் சேதமடைவதை தடுக்க, தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து துறைமுகத்திலும் அமைத்தால் படகுகள் சேதமடைவதை தடுக்க முடியும். ராமேஸ்வரம் தீவில் பைபர் படகுகளுக்கு அனுமதி தரவேண்டும். அவ்வாறு, அனுமதி தரும்போது மானியத்துடன் டீசல் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மலைவாழ் மக்களை மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததுபோல், பழங்குடி மீனவ மக்களை பழங்குடி மீனவர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மேலும், மீனவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றி நடைமுறை படுத்த வேண்டும். முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் நிதியை உயரத்தி 8000 ரூபாயாக வழங்க வேண்டும். இத்துடன், மீனவர்களுக்கு முன்னர் படகு, வலை மற்றும் இயந்திரம் மானியத்துடன் வழங்கப்பட்டதுபோல, மீண்டும் மீனவர்களுக்கு பயன்படும் வகையில் மானியம் வழங்கவேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஏற்படுத்திதரும் மீனவர்களுக்கு, மீன்பிடிக்க உதவும் விசைப்படகு, நாட்டுப்படகிற்கு டீசல் மானியத்தை அதிகரித்தும், வரியை குறைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023 பட்ஜெட்டில் மீனவர்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, TN Budget 2023