முகப்பு /ராமநாதபுரம் /

இலங்கை கடற்படையால் இனி எந்த பிரச்சினையும் வரக்கூடாது.. மீனவர்கள் கோரிக்கை!

இலங்கை கடற்படையால் இனி எந்த பிரச்சினையும் வரக்கூடாது.. மீனவர்கள் கோரிக்கை!

X
மீனவர்கள்

மீனவர்கள் பேச்சு வார்த்தை

Ramanathapuram fisherman | மீனவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக தீர்மானம்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

இலங்கையில் சிறைபிடித்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் தீர்மானம்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில், ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், ஆகிய‌ பகுதி மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் அவரச ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்களின் சில கோரிக்கைகளை  தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு, அதற்கு வரும் 25-ம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக மீனவர்கள் கூறினர்.

மீனவர்களின் கோரிக்கைகளாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் ஆய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி, இலங்கைக்கு அனுப்பி படகுகளை ஆய்வு செய்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீட்க முடியாத படகுகளுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையாக உரிமையாளருக்கு வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு பிடிக்கப்பட்டு மீட்க முடியாமல் போன படகுகளுக்கு அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய் இழப்பீடு, 20 படகுகளுக்கு வழங்கப்படாமல் விடுபட்டு உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடல் வளத்தை காக்கவும், இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து, தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் செல்லும் போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் எந்த பிரச்சனையும், பாதிப்பும் ஏற்படாத நிலைமை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ | பொதுமக்களின் தாகம் தீர்க்கும் கமுதி போலீசார்..

top videos

    மீனவர்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து 25-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவிட்டால், தமிழக முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டத்தினை ராமேஸ்வரத்தில் நடத்த இருப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    First published:

    Tags: Fisher man, Local News, Ramanathapuram