Home /ramanathapuram /

Ramanathapuram | அந்நியர் ஊடுருவல் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு- பாய்மரப் படகில் சாகசப் பயணம் செய்த கடலோர காவல்படை

Ramanathapuram | அந்நியர் ஊடுருவல் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு- பாய்மரப் படகில் சாகசப் பயணம் செய்த கடலோர காவல்படை

கடலோர காவல்படை சாகசப் படகு பயணம்

கடலோர காவல்படை சாகசப் படகு பயணம்

Ramanathapuram local news | அந்நிய ஊடுருவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாய்மரப் படகில் சாகச் பயணம் மேற்கொண்ட தமிழக கடலோரக் காவல்படையில் மண்டபத்திலிருந்து புறப்பட்டனர்.

கடல் மாசுபாடு மற்றும் அந்நிய ஊடுருவல் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாய்மர படகில் தமிழக கடலோர பாதுகாப்பு குழு காவல்துறையினர் சாகச நிகழ்ச்சியை கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். அவர்கள், சாகச பயணம் மேற்கொண்டு மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர்.

தமிழக கிழக்கு கடலோரப் பகுதிகளில் அந்நிய ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்தவும், கடல் மாசுபாட்டை தடுக்கவும், மீனவர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திட சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் சாகச பாய்மர படகு பயணத்தை கடந்த 9-ம் தேதி சென்னையில் இருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடலோர காவல்படை சாகசப் படகு பயணம்


மீனவ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் இருந்து பாய்மர படகில் புறப்பட்ட இந்த குழு காரைக்கால், நாகை, புதுக்கோட்டை வழியாக 510 நாட்டிகல் தூரம் பயணித்து ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாம் கடற்கரைக்கு வந்தன.

கடலோரப் பாதுகாப்பு படையினர்


இந்த சாகச பயணத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் 12 பேர் அடங்கிய குழுவினர் 2 பாய்மர படகில் பயணம் மேற்கொண்டனர்.

கடலோரப் பாதுகாப்பு படை சாகசப் பயணம்


இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பச்சை கொடி காட்டி பயணத்தை துவக்கி வைத்தார். இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலோரப் பாதுகாப்பு படை சாகசப் பயணம்


இன்று மீண்டும் மண்டபத்தில் இருந்து கடல் வழியாக பாய்மர படகில் புறப்பட்டு காரைக்கால் சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த பயணமானது மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி