ஹோம் /ராமநாதபுரம் /

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் - இந்திய அணியை வழிநடத்தப்போகும் இராமநாதபுரம் இளைஞர்..

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் - இந்திய அணியை வழிநடத்தப்போகும் இராமநாதபுரம் இளைஞர்..

வினோத் பாபு

வினோத் பாபு

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக்கோப்பை டி-20  கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக தமிழக இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் வரும் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடக்கிறது.  இந்த சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

பாகிஸ்தான் செல்லும் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த வினோத் பாபு (வயது 30) என்பவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  வினோத் பாபுவின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்செல்வனூர் ஆகும். ஏழ்மையின் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் கிரிக்கெட் விளையாடின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக அதில் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில்தான் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வினோத் பாபு இந்திய அணியை வழிநடத்துவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.  இந்திய அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ள  வினோத் பாபுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்துவருகிறது.

Published by:Ramprasath H
First published:

Tags: Local News, Ramanathapuram