முகப்பு /ராமநாதபுரம் /

சுருக்குமடி மீன்பிடி வலைக்கு வாரத்தில் 2 நாள் அனுமதி - ராமேஸ்வரம் மீனவர்கள் வைக்கும் கோரிக்கை

சுருக்குமடி மீன்பிடி வலைக்கு வாரத்தில் 2 நாள் அனுமதி - ராமேஸ்வரம் மீனவர்கள் வைக்கும் கோரிக்கை

X
சுருக்குமடி

சுருக்குமடி மீன்பிடிப்பிற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்து கட்டுப்பாடுகளுடன் தீர்ப்ப

Rameshwaram Fishermen | தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து மீனவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டிருந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சில கட்டுபாடுகளுடன்அனுமதி அளித்துள்ளது.இந்த வலைகள் அனுமதி குறித்து நாட்டுப்படகு, விசைப்படகு, கரைவலை மீனவர்களின் கருத்துகளைக் காண்போம்.

தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. இந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தால் பவளப்பாறைகள், அரியவகை மீன்கள் அழிந்துவடும் எனக்கூறி தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்கு தொடரப்பட்டன. உயர் நீதிமன்றம்,தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீரப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சில கட்டுப்பாடுகளுடன் உச்சநீதிமன்றம் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளித்துள்ளது.

சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பிற்கான கட்டுபாடுகள், வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் மட்டும் மீன்பிடிக்கவும், நிலப்பரப்பில் இருந்து 12 மைல் தூரம் கடந்து மீன்பிடிக்கவும் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மீன்பிடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

First published:

Tags: Fisherman, Local News, Ramanathapuram, Tamil News