முகப்பு /ராமநாதபுரம் /

நீலநிறப்பட்டில் ஆற்றில் இறங்கிய அழகர்.. பரமக்குடியில் களைகட்டிய திருவிழா!

நீலநிறப்பட்டில் ஆற்றில் இறங்கிய அழகர்.. பரமக்குடியில் களைகட்டிய திருவிழா!

X
கள்ளழகர்

கள்ளழகர் திருக்கோலத்தில்  நீலநிறபட்டில் சுந்தரராஜ பெருமாள்

Paramakudi alagar : மதுரையை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் சித்திரை திருவிழா களைகட்டியது.

  • Last Updated :
  • Paramakudi, India

மதுரைக்கு அடுத்தப்படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சித்திரை பௌர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பரமக்குடியில் உள்ள அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் கோலம் கொண்டு பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.

தங்க குதிரை வாகனத்தில் நீலநிற பட்டை உடுத்தி கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளிய சுந்தர்ராஜ பெருமாளை அங்கு சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை தெளித்து குளிர்ச்சியுடன் வரவேற்று கள்ளழகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Madurai Chithirai Festival, Paramakudi Constituency, Ramanathapuram