முகப்பு /ராமநாதபுரம் /

கமுதியில் வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர்வித்த கோடை மழை!

கமுதியில் வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர்வித்த கோடை மழை!

X
கமுதியில்

கமுதியில் பெய்த கோடை மழை

Summer Rains In Kamuthi : ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில், கமுதி சுற்றுவட்டாரப் பகுதியில் இடிமின்னலுடன் கோடைமழையானது வெளுத்து வாங்கியதில் குளிர்ச்சி நிலவியது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைக்காலமானது தொடங்கியதிலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெளியில் சென்றால் வெப்பச்சலனம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன், அபிராமம், கல்லுப்பட்டி, நாராயணபுரம், கோட்டைமேடு, சோடியனேந்தல், கண்ணார்பட்டி ஆகிய பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழையானது கொட்டி தீர்த்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கோடை வெயிலானது பொதுமக்களை வாட்டி வந்தநிலையில், கனமழை பெய்து வெப்பம் தணிந்ததால் குளிர்ச்சியான சுழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Rain, Ramanathapuram, Summer Heat