ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக மேலூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரும்புகள் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு கட்டு கரும்பானது 400 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றால் மனதிற்கு ஞாபகம் வருவதில் கரும்பும் முக்கியமான ஒன்று. பொங்கல் பண்டிகை கரும்பு இல்லாமல் நிறைவு பெறாது. எனவே, பொங்கல் விழாவின்போது சாலையோரங்களில் கரும்பு விற்பனை தீவிரமாக நடைபெறும்.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் இருந்து பொங்கல் கரும்புகள் கொண்டு வரப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை விற்பனை நடைபெறத் தொடங்கியுள்ளது.
இதில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையில் மேலூரில் இருந்து பொங்கல் கரும்புகள் வாங்கிவரபட்டு விற்பனை தொடங்கியது. ஒரு கட்டில் 10 கரும்புகள் உள்ளன. ஒரு கட்டு 400 ரூபாயிலிருந்து, 500 ரூபாய் வரை விற்க்கப்படுகிறது. ஒரு கரும்பு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேல்மருவத்தூர் கரும்பானது 5அரை அடி முதல் 6 அடி வரை வளர்ந்தள்ளதால், நன்கு சுவையுடன் இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர். வாங்கும்போது கருப்பினை சுவைத்து பார்த்து இனிப்புடன் இருந்ததால் தான் விற்பனைக்கு வாங்கி கொண்டுவந்தோம், இனிப்பாக கரும்பு இல்லையென்றால் பொதுமக்களிடம் வரவேற்பு இருக்காது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது கொரோனா ஊரடங்கு இருந்ததால் வியாபாரம் மோசமாக இருந்ததாகவும், இந்தாண்டு அதிகமாக கரும்பு விற்பனை ஆகும் என வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
10 நாட்களில் திருமணம்: சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- ராமநாதபுரத்தில் சோகம்
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Ramanathapuram