ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை.. ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழை..

பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை.. ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழை..

ராமநாதபுரத்தில் திடீரென பெய்த பலத்தமழை

ராமநாதபுரத்தில் திடீரென பெய்த பலத்தமழை

Ramanathapuram Rains | ராமநாதபுரத்தை பொறுத்தவரையில் 5 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது அதன் பிறகு வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம்  சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவுகிறது.

அந்தமான் நிகோபார் தீவுகள் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதனால் வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

ராமநாதபுரத்தில் பட்டினங்காத்தான், பாரதி நகர், பேராவூரனி, முதுநாள் ரோடு, கோப்பேரிமடம், கேணிக்கரை, சாத்தான்வலசை, வாளாந்தரவை, காட்டூ ஊரணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதேபோன்று ராமேஸ்வரத்திலும் பேருந்து நிலையம், திட்டக்குடி, பர்வதம், வடகாடு, வேர்க்கோடு, செம்மமடம், ஓலைக்குடா, சோம்பை, மாங்காடு, சுடுகாட்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ராமநாதபுரத்தை பொறுத்தவரையில் 5 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது அதன் பிறகு வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Published by:Arun
First published:

Tags: Heavy Rains, Local News, Ramanathapuram