முகப்பு /ராமநாதபுரம் /

கும்பாபிஷேகத்திற்கு தயாராக இருந்த சுடலை மாடன் கோவிலின் யாகசாலை இடிப்பு- ராமநாதபுரத்தில் பரபரப்பு

கும்பாபிஷேகத்திற்கு தயாராக இருந்த சுடலை மாடன் கோவிலின் யாகசாலை இடிப்பு- ராமநாதபுரத்தில் பரபரப்பு

X
இடிக்கப்பட்ட

இடிக்கப்பட்ட கோவில்

Ramanathapuram | ராமநாதபுரம் தேவிபட்டினம் பகுதியில் சுடலை மாடன் கோவிலின் யாகசாலை இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர்போகி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளநிலையில், யாகசாலை மர்மநபர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் புதிதாக சுடலை மாடன் ஈசன் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் வருகின்ற 16-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற உள்ளது. அதனால், 15-ம் தேதி நடைபெறவுள்ள யாகசாலை பூஜைக்காக யாகசாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நள்ளிரவில் மர்மநபர்களால் யாகசாலை இடிக்கப்பட்டு அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த கூரையையும், தடுப்பு வேலியையும் இடித்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து, கோவில் பூசாரி மாடசாமி, தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் பூசாரிக்கும், அந்த கிராமத்தில் உள்ள சிலருக்கும் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதால் யாகசாலை இடிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Ramanathapuram