முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

X
மருத்துவமனையில்

மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Ramanathapuram News l பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 240க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று வழக்கம்போல் மாணவர்களுக்கு மதியவேளையில் சத்துணவு பரிமாறப்பட்டுள்ளது, சத்துணவு சாப்பிட்ட 12 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிறு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றது.

இதையடுத்து, சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம் குறித்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram