ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் விடுதிக்குள் மறைந்திருந்து மாணவனை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு

ராமநாதபுரத்தில் விடுதிக்குள் மறைந்திருந்து மாணவனை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவன்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவன்

Ramanathapuram District News : அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்த மாணவரை கடித்த பாம்பு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்த மாணவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் தேவிபட்டினம் செல்லும் வழியில் உள்ள கோப்பேரி மடத்தின் அருகேஉள்ள கூட்டாம்புளியில் அமைந்துள்ளது அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பு பயில்கின்றனர்.

இந்த கல்லூரியில் தென்காசியை சேர்ந்த ரமேஷ் என்ற மாணவர் இ.சி.இ இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் தென்காசி என்பதால் அங்கிருந்து வந்து செல்ல முடியாததால் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்.

இதையும் படிங்க : “வாழவே வழியில்லை.. உயிரை பணயம் வைத்து வந்தோம்” - இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 10 ஈழ தமிழர்கள் குமுறல்..

இந்நிலையில், இன்று காலை மாணவர் ரமேஷ் விடுதியில் உறங்கி கொண்டிருக்கும்போது விடுதியில் மறைந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதையடுத்து, அவருடன் இருக்கும் சக மாணவர்கள் மாணவர் ரமேஷை காப்பாற்றி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர் ரமேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நிலை சீரானது. தற்போது, மழை பெய்து அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருவதால் சுற்றிலும் புதர் செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால், புதர் செடிகளில் மறைந்திருந்த பாம்பு விடுதிக்குள் வந்திருக்கும் என்று மாணவர்கள் கூறினர். விடுதிக்குள் சுற்றி உள்ள செடிகள் புதர்களை அகற்ற வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram