ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகள்.. இழப்பீடு வழங்க மீனவர்கள் வலியுறுத்தல்..

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகள்.. இழப்பீடு வழங்க மீனவர்கள் வலியுறுத்தல்..

சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகள்

சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகள்

Rameshwaram Fishermen | ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் ஒவ்வொரு ஆண்டும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து தரைதட்டி சேதமடைவது வழக்கமான ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு வீசிய சூறைக்காற்றினால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. எனவே படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும், தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் மாவட்டத்திலேயே அதிக விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சுமார் 800-க்கும்‌ மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீசும் சூறைக்காற்றால் ஒவ்வொரு ஆண்டும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து தரைதட்டி சேதமடைவது வழக்கமான ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீசிய சூறைக்காற்றினால் ஜோஸ்வா, கென்னடி, அந்தோணிராஜ், கிருபை, இன்ரைசன், சவரிமுத்து ஆகியோரின் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. 5 படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கி சேதமாகி உள்ளது.

இதையும் படிங்க : பரமக்குடியில் நாய் கடித்து குதறியதால் உயிருக்கு போராடிய புள்ளிமான்... பொதுமக்கள் மீட்டு சிகிச்சை...

சேதமடைந்த ஒவ்வொரு படகையும் சரி செய்ய 50,000 ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும். இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு மீனவர்களுக்கு ஏற்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, படகுகளை பாதுகாப்புடன் நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்றும், சேதமடைந்த படகுகள் கணக்கிட்டு படகுகளின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram