Home /ramanathapuram /

Ramanathapuram | பாம்பன் குருசடைதீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்

Ramanathapuram | பாம்பன் குருசடைதீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்

சுற்றுலாப் பகுதி

சுற்றுலாப் பகுதி

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குருசடை தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடி வரையில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் இருக்கின்றன. இவற்றை சுற்றி பவளப் பாறைகள், டால்பின், கடல் பசு உட்பட 2,000-க்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன.

இதில் பாம்பன் குந்துக்காலுக்கு வெகு அருகே உள்ள குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு,சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவற்றுக்கு படகு மூலம் சென்று அரிய வகை பவளப் பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை சுற்றிப் பார்ப்பதற்கான சுற்றுலாத் திட்டம் வனத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

சுற்றுலாப் பகுதி


குருசடைதீவுக்கு பாம்பன் குந்துக்கால் வனத்துறை படகு இறங்கு தளத்தில் இருந்து தொடங்கும் படகு சவாரி, குருசடை தீவிற்கு சென்று அங்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபாதையில் பயணித்து குருசடை தீவில் காணப்படும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றை பார்வையிட்டு மீண்டும் குந்துகால் அழைத்து வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இருந்து குருசடை தீவுக்கு வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை அறியாமல் அங்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் குந்துகால் கடற்கரையில் உள்ள சுற்றுலா படகு சவாரி தளமும் வெறிச்சோடி காணப்படுகிறது.

பாதுகாப்பு கருதி வனத்துறையின் சுற்றுலா படகுகள் அனைத்தும் குருசடைதீவு கரையில் ஏற்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காற்றின்வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே வழக்கம்போல் குருசடை தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி