ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் அமைந்துள்ளது பழமையான புனித குழந்தை தெரசாள் தேவாலயம். இந்த தேவாலயத்தில் 1922 முதல் 1954 வரை 32 ஆண்டுகள் பங்குதந்தையாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலியஸ் பாதிரியார் பொடேல் பணியாற்றியுள்ளார்.
இவர் பிரான்ஸ் நாட்டில் 1884-ம் ஆண்டு பிறந்துள்ளார். தனது 19-வயதில் இயேசு சபையில் இறைபணியை உணர்ந்து இணைந்துள்ளார். அப்போது பயிற்சி பெற்றிருக்கும்போது பிரான்ஸ் நாட்டு சட்டத்தின்படி ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.
அதன் பிறகு இந்தியா வந்து பணியாற்ற தொடங்கிய இவர் வடமாநிலத்தில் உள்ள குருசியான் குருமடத்தில் பயிற்சி பெற்று, பயிற்சி முடிந்த பிறகு 1919-ம் ஆண்டில் குருபட்டம் பெற்று தூத்துக்குடியில் உள்ள அடைக்கலபுரத்தில் துணை பங்கு தந்தையாக மூன்று ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
இதையும் படிங்க : நாமக்கல் முட்டை விலை அதிரடியாக உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!
இதையடுத்து, 1922-ல் தங்கச்சிமடத்தில் உள்ள புனித தெரேசா ஆலயத்தில் தனது இறைபணியாற்ற தொடங்கினார், இங்கிருந்த 32 ஆண்டுகள் தனது இறைபணிகள் மட்டும் செய்யாமல் சமூக பணியும், கல்வி பணியும் செய்து அனைத்து மத மக்களிடையும் பழகி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் அன்பையும் ,பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவர் ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடம், சுடுகாட்டன்பட்டி, அரியான்குண்டு, வேர்கோடு ஆகிய பகுதிகளில் பள்ளிகளை அமைத்தது மட்டுமல்லாமல், ஆத்திக்காடு, சுடுகாட்டன்பட்டி, வேர்க்கோடு, வேர்காடு, அக்காள்மடம், வேதாளை, பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் தேவாலயங்களையும் அமைத்துள்ளார்.
இவர் அரசு அதிகாரிகளிடம் கொண்ட நட்புறவால் ரயில்வே துறையிலும், துறைமுக அலுவலங்களிலும், அரசு அலுவலகங்களில் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும், தங்கச்சிமடத்தில் ரேசன் கடையை அமைத்துள்ளார், மேலும் கல்வி பயில மாணவர்கள், மாணவர்களுக்கு விடுதிகளும் அமைத்துள்ளார். பின்பு1965-ம் ஆண்டு உயிர்நீத்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவரின் இறைப்பணியை போற்றி நினைவு கூறும் வகையில் தங்கச்சிமடம் புனித தெரோசாள் ஆலயத்தின் வளாகத்தில் நினைவு மண்டபம் அமைத்து சிலை வைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram