சென்னை மெரினா பீச்சில் எஸ்.யு.பி. என்ற ஸ்டான்ட்அப் பெடல் கிளப் நடத்தி ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து பயிற்சியாளராகவும், ஸ்டான்ட்அப் பெடல் வீரராகவும் இருந்து வருபவர் சதீஸ்குமார். இவர் ஸ்டான்ட் அப் பெடல் மூலமாக கடல்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனுஷ்கோடி கடல் வழியாக தலைமன்னார் வரையில் நின்று கொண்டே துடுப்பை பயன்படுத்தி படகை இயக்கிச்சென்றார்.
பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வரை செல்ல முயற்சி செய்து சாதனை படைக்கலாம் என எண்ணி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வந்தடைந்த இவர் நேற்று காலையில் 10: 20 மணி அளவில் கடலில் ஸ்டான்ட்அப் பெடல் செய்ய ஆரம்பித்து 3:00 மணியளவில் தலைமன்னாருக்கு சென்றடைந்தார்.
தலைமன்னாரில் இருந்து அதிகாலை 6:30 மணிக்கு புறப்பட்டு தனுஷ்கோடிக்கு 11:30 மணி அளவில் வந்தடைந்தார். இதுவரையிலும் நீச்சல் மூலமாக மட்டுமே தனுஷ்கோடிக்கும் - தலைமன்னாருக்கு சென்றுள்ள நிலையில், ஸ்டான்ட்அப் பெடல் மூலமாக சாகசம் செய்து சாதனை மேற்கொண்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ்கோடியில் இங்கிருந்து செல்லும்போது, எதிர்காற்றில் சிரமம் அடைந்ததாகவும், அங்கிருந்து வரும்போது சுலபமாக வந்ததாகவும், இருநாட்டு கடற்படையினரும் நன்றாக ஒத்துழைப்பு தந்து உதவினர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க : "பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் மீன்" கிளி மீன் பற்றிய சுவாரஸ்யங்கள்!
மேலும், இதற்கு பெரிதும் உதவியாக இருந்து ஊக்கப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவிற்கு நன்றி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram