ஹோம் /ராமநாதபுரம் /

தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகள் ஹோவர் கிராப்ட் மூலம் மீட்பு.. 

தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகள் ஹோவர் கிராப்ட் மூலம் மீட்பு.. 

இலங்கை அகதிகள் 

இலங்கை அகதிகள் 

Srilankan Refugees at Dhanushkodi | இலங்கையில் இருந்து மேலும் ஆறு பேர் தனுஷ்கோடி அடுத்த 1-ம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் தீடையில் இலங்கையிலிருந்து அகதிகளாக ஆறு பேர் தஞ்சம் அடைந்த நிலையில், கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க உள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு போன்ற நாடுகளுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்த வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 176 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:  கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா! 

இதையடுத்து, இன்று இலங்கையில் இருந்து மேலும் ஆறு பேர் தனுஷ்கோடி அடுத்த 1-ம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் மூலம் அவர்களை மீட்டு தனுஷ்கோடி கடற்கரைக்கு கொண்டு வந்து பின்னர் கடலோர காவல் குழுமம் காவல்துறையினருடன் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Sri Lanka