முகப்பு /ராமநாதபுரம் /

“இலங்கையில் வாழ வழியில்லை.. பைபர் படகுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து வந்தோம்..” தனுஷ்கோடிக்கு வந்த மேலும் 5 ஈழ தமிழர்கள் வேதனை

“இலங்கையில் வாழ வழியில்லை.. பைபர் படகுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து வந்தோம்..” தனுஷ்கோடிக்கு வந்த மேலும் 5 ஈழ தமிழர்கள் வேதனை

தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை தமிழர்கள்

தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை தமிழர்கள்

Ramanathapuram District News : இலங்கையிலிருந்து தனுஷ்கோடி பகுதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜந்து பேர் தனுஷ்கோடி அடுத்த முதல் தீடையில் தஞ்சமடைந்தனர். விசாரணைக்கு பிறகு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால், இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வந்திருப்பதாகவும், அவர்கள் தனுஷ்கோடி அடுத்த முதல் தீடை பகுதியில் இருப்பதாகவும், அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், கடலோர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : தெலங்கானா மூதாட்டி காலில் ஏறிய ராமேஸ்வரம் கோயில் தங்கதேர் சக்கரம்..

தகவல் கிடைத்த உடன் தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகு மூலமாக முதல் தீயை பகுதிக்கு சென்று காவல்துறையினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து கடலோர காவல்படை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் பொருளாதார நெருக்கடியினால் மிகுந்த வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், பணம் இருந்தாலும் வாங்க பொருள் இல்லாத சூழல் உள்ளது. பல நாட்கள் பட்டினியாக இருந்து பசியினால் வாடிவந்துள்ளோம். கூலி வேலை பார்க்கும் எங்களால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் விடுதிக்குள் மறைந்திருந்து மாணவனை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு

மேலும், இலங்கை தலைமன்னாரில் இருந்து இரவு ஒரு மணி அளவில் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும் கொடுத்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்ததாகவும், நாங்கள் ஜந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

விசாரணை முடிந்த பிறகு இவர்கள் மண்டபம் முகாம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரையில் 213 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Ramnad