முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் தர்மமுனிஸ்வரர் கோவில் திருவிழா!

ராமநாதபுரம் ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் தர்மமுனிஸ்வரர் கோவில் திருவிழா!

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் தர்மமுனிஸ்வரர் கோவில் திருவிழா

Mallammal Kaliamman Dharmamuniswarar Temple : ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் தர்மமுனிஸ்வரர் கோவிலின் வருடாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் ஊராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது, ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் ஸ்ரீதர்மமுனிஸ்வரர் கோவில். இந்த கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வருஷாபிஷேகமானது யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், 2ம் கால பூஜை மற்றும் பரிவார மூர்த்திகளுடன் வருஷாபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டது .மேலும் கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு சந்தனம், பால், மஞ்சள், தயிர், இளநீர் போன்ற திரவியங்களைக் கொண்டு 16 வகையான விஷேச மகா அபிஷேகம், கும்பபஜனை அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் தர்மமுனிஸ்வரர் கோவில் திருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வருஷாபிஷேக விழாவில் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அம்பாளின் அருள் பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram