முகப்பு /ராமநாதபுரம் /

கொரோனாவால் மூடப்பட்ட நூற்பாலை.. பரமக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்..

கொரோனாவால் மூடப்பட்ட நூற்பாலை.. பரமக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்..

X
கொரோனாவால்

கொரோனாவால் மூடப்பட்ட நூற்பாலை

Spinning Workers Protest In Paramakudi : பரமக்குடியில் செயல்பட்டு வந்த நூற்பாலை கொரோனா காரணமாக மூடப்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் செயல்பட்டு வந்த நூற்பாலையானது கொரோனா காரணமாக மூடப்பட்டு 3 வருடங்கள் கடந்த நிலையில், நூற்பாலையை திறக்ககோரி ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசிற்கு சொந்தமான நூற்பாலையானது செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நூற்பாலையானது கடந்த 2020-ம் ஏற்பட்டு மார்ச் மாதம் வந்த முதல் கொரோனா அலையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    3 வருடங்கள் கடந்தும் திறக்கப்படாத நிலையில், தொழிலாளர்களின் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருவதால் நூற்பாலையை திறக்க வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மேலும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்பாலையின் முன்பாக ஏராளமான ஊழியர்கள் கஞ்சிகாய்ச்சி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: Corona, Local News, Ramanathapuram