ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - முதல் பரிசு ரூ.5000 அறிவிப்பு

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - முதல் பரிசு ரூ.5000 அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Ramanathapuram District News | காந்தியடிகள் பிறந்தநாளளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் பரசுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் காந்தியடிகள் பிறந்தநாளை ஒட்டி இன்று (12ம் தேதி) (புதன் கிழமை) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் தனித்தனியாக பேச்சு போட்டி சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 1 மணிக்கும் போட்டி தொடங்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தேர்வுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க :  தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்புப்பரிசு ரூ.2000 வழங்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram