Home /ramanathapuram /

மீனவர்களுக்கே போக்கு காட்டும் தங்கப்பா (எ) முண்டக்கண்ணி மீன்களின் சிறப்புகள்..

மீனவர்களுக்கே போக்கு காட்டும் தங்கப்பா (எ) முண்டக்கண்ணி மீன்களின் சிறப்புகள்..

முண்டக்கண்ணி

முண்டக்கண்ணி மீன்..

Ramanathapuram Latest News : ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு முண்டக்கண்ணி என்று கூறக்கூடிய  Sargocentron rubrum குடும்பத்திற்கு உட்பட்ட மீன் அதிகம் கிடைத்துள்ளது,

மேலும் படிக்கவும் ...
அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முண்டக்கண்ணி மீன்களின் வரத்து அதிகம் உள்ள நிலையில் விலை குறைவாக கிடைப்பதால், உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்கின்றனர் பாம்பன் பகுதி மீனவர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு முண்டக்கண்ணி என்று கூறக்கூடிய  Sargocentron rubrum குடும்பத்திற்கு உட்பட்ட மீன் அதிகம் கிடைத்துள்ளது, இவ்வகை மீனுக்கு கண் பெரியதாக இருப்பதால் முண்டக்கண்ணி என்று அழைக்கப்படுகிறது.

முண்டக்கண்ணி மீன்..


இவ்வகை மீன்கள் இந்திய பெருங்கடலில் உள்ள செங்கடல் முதல் மேற்கு பசுபிக் கடல்பகுதிவரை அதிகளவில் காணப்படுகிறது. இரவில் தான் மீனவர்கள் இதனை அதிகளவில்  பிடிப்பார்கள், முண்டக்கண்ணி மீன்களும் இரவில் தான் கூட்டமாக பாறைக்குள் இருந்து வெளிவரும்.அப்போது வலையில் மொத்தமாக சிக்கும்.

முண்டக்கண்ணி மீன்..


தங்கப்பா (எ) முண்டக்கண்ணி:

இதற்கு தங்கப்பா என்ற மற்றொரு பெயரும் உண்டு அதற்கு காரணம் லேசான மஞ்சள், வெள்ளி நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் அணில் மீன் என்றும் அழைக்கப்படுகிறது.

முண்டக்கண்ணி மீன்..


தங்கப்பா மீனானது 6 அங்குல நீளம் முதல் 10 அங்குலம் வரையிலும் வளரக்கூடியது, இதன் முட்கள் விஷத்தன்மை உடையவை.  மீனவர்களில் உடலில் காயத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. அப்போது உடலில் அயர்ச்சி போன்று ஏற்படுமாம்,

பகலில் பாறைகளிலும், பாறை இடுக்குகளிலும் மறைந்திருந்து வாழும் தன்மை உடையது, இரவில் உணவை தேடி வெளியே வரும்போது தான் மீனவர்களின் வலையில் சிக்குகின்றன. இவ்வகை மீன்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. பொதுவாக இவை வலையில் பிடிபடுவது கடினம் என்று மீனவர்கள் கூறிகின்றனர்.

முண்டக்கண்ணி மீன்..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மீனின் பயன்பாடு தமிழகத்தைவிட கேரள மாநிலத்தில் அதிகம். ஆதலால் கேரளாவிற்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து கிலோ 80 முதல் 100 வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி