Home /ramanathapuram /

சுவையான கண்ணாடி பாறை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?

சுவையான கண்ணாடி பாறை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?

கண்ணாடி

கண்ணாடி பாறை மீன் / Glass Reef Fish

Glass Rreef Fish : எவ்வளவு விலை விற்றாலும் இந்த கண்ணாடி பாறை மீன்களை வாங்கி செல்வதற்கு ஒரு கூட்டம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு இரண்டு பெரிய அளவிலான 5 முதல் 10 கிலோ வரை எடை கொண்ட  பாறை வகை மீன்களின் ஒருவகையான கண்ணாடி பாறை மீன்கள் சிக்கியுள்ளன. உடலமைப்பானது சப்பட்டையாக உடல் பகுதி பெரிதாக வால் நீண்டு காணப்படும். இந்த மீனின் சிறப்புகளை பற்றி காண்போம்.

கண்ணாடி பாறை மீனானது மீன் பிரியர்கள் அதிகளவில் விரும்பி வாங்கக்கூடிய மீனாக உள்ளது. உணவகங்களில் மட்டுமல்லாமல் டீ கடைகளில் வடை போடுவதற்கும் இந்த மீன் பயன்படுத்தப்படுகிறது.

நல்ல சுவை இருப்பதால் ராமேஸ்வரம் மக்களிடம் இந்த மீன்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.  எவ்வளவு விலை விற்றாலும் இந்த மீனை வாங்கி செல்வதற்கு ஒரு கூட்டம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கண்ணாடி பாறை மீன்


பாறை வகை மீன்களில் 10-ற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது.
மன்னார் வளைகுடா தென்கடலில் ஆழ்கடல் பாறைகளுக்குள் சிறிய வகை மீன்களை வேட்டையாடி உண்டு வாழ்கிறதாம் இந்த கண்ணாடி பாறை மீன்கள்.

கண்ணாடி பாறை மீன்


விலை:

இங்கிருந்து மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருச்சி, சேலம், ஈரோடு வரையிலும் இந்த மீன்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

தூத்துக்குடி  மற்றும் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறதாம். ஒரு மீன் அதிகபட்சமாக 10 கிலோ  வரையிலும் எடை இருக்கக்கூடும்.   இங்கிருந்து கிலோ ரூ.250-க்கு இந்த மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

கண்ணாடி பாறை மீன்


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மருத்துவ குணங்கள்:

இதயம் பலமடைய இந்த மீன் உதவுகிறது.   ஒமேகா- 3 ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைவாக உள்ள மனிதர்களுக்கு இதை சாப்பிட கொடுத்தால் ஊட்டச்சத்து அதிகளவில் கிடைக்குமாம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி