முகப்பு /ராமநாதபுரம் /

உத்திரகோசமங்கை ஸ்ரீவராகி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் - இதன் சிறப்பு தெரியுமா?

உத்திரகோசமங்கை ஸ்ரீவராகி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் - இதன் சிறப்பு தெரியுமா?

X
உத்திரகோசமங்கை

உத்திரகோசமங்கை ஸ்ரீவராகி அம்மன் ஆலயம்

Uttarakhosamangai Varagi Amman temple | வராகி அம்மனுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க கவசத்தை அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்ததார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

திருஉத்தரகோசமங்கை பகுதியில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்புவாக அமைந்த ஸ்ரீ வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்தனர்.

அங்கே பஞ்சாமிர்தம், பால், பன்னீர், இளநீர், விபூதி, குங்குமம் போன்ற 15 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்பின்னர், உலக நன்மை வேண்டியும் பல்வேறு நோய் தொற்றுகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும், 51 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பு யாக பூஜை செய்து, அதன்பின் 1008 சங்காபிஷேகம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத் தொடர்ந்து, வராகி அம்மனுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க கவசத்தை அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த கோவிலில் அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் முழுமையாக நிறைவேறும் என்பது ஐதீகம்.

First published:

Tags: Local News, Ramanathapuram