ஹோம் /ராமநாதபுரம் /

மேளங்கள் இசைத்து குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம்- ராமநாதபுரத்தில் கோலாகலம்

மேளங்கள் இசைத்து குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம்- ராமநாதபுரத்தில் கோலாகலம்

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் பொங்கல் கொண்டாட்டம்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் குதிரை வளர்ப்பவர்கள் குதிரைகளை அலங்கரித்து மேளங்கள் இசைத்து இசைக்கு ஏற்றாற்போல் குதிரைகளை நாட்டியமாடி வைத்து கால்நடை பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 50-க்கும்‌ மேற்பட்டோர் நாட்டியக் குதிரைகளை வளர்த்து மாவட்டத்தில் நடைபெறும் திருமணம் மற்றும் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு குதிரைகளை நடனமாட அழைத்து செல்கின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் குதிரை வளர்ப்பவர்கள் மாட்டுப் பொங்கலுக்கு குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கால்நடை பொங்கல் வைத்து கொண்டாடினர். இதுபோன்ற ஆடுகள், நாய்கள் போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் நன்றி செலுத்தும் விதமாக கால்நடை பொங்கல் கொண்டாடினர்.

ராமநாதபுரத்தில் 30,000 மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்

இந்நிகழ்விற்கு , முன்னதாக திருவிழா மற்றும் விசேஷத்திற்கு கொண்டு செல்வது போன்று குதிரைகளை குளத்தில் குளிப்பாட்டி, ஆபரணங்கள் அணிவித்து அழகுப்படுத்தி பின் ஊருக்குள் கோலாகலமாக டிரம்செட் அடித்து அந்த இசைக்கு ஏற்றவாறு ஆடிக்கொண்டே குதிரைகளை ஊர்வலமாக அழைத்து வந்து குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக 'கால்நடைப் பொங்கல்' கொண்டாடினர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram