மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்விற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் குறித்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் கீழ்காணும் விவரப்படி நடைபெற உள்ளன.
வருகிற 4ஆம் தேதி (புதன் கிழமை) போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 5ஆம் தேதி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 11ஆம் தேதி நயினர்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 13ஆம் தேதி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 18ஆம் தேதி கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 19ஆம் தேதி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 25ஆம் தேதி ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
பிப்ரவரி 7ஆம் தேதி திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 7ஆம் தேதி திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 14ஆம் தேதி மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 16ஆம் தேதி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க
மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.