முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் கால்நடைகளுக்கான சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்- பொதுமக்கள் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் கால்நடைகளுக்கான சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்- பொதுமக்கள் பங்கேற்பு

கால்நடை சிறப்பு முகாம்

கால்நடை சிறப்பு முகாம்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சம்பை கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஐம்பதிற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள சம்பை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், சினைப் பரிசோதனை செய்தல், மலடு நீக்கி சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கால்நடை முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளுதல், தீவனப் பயிர் வகைகளை சாகுபடி விளக்கம், சிறு அறுவை சிகிச்சை சிறு கண்காட்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வல்லுநர்கள் கொண்டு தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது.

கால்நடை முகாமில் மக்கள்

இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடைபெற்றது. இதில் சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைகான பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த கால்நடை சிறப்பு முகாமில் சம்பை கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றுச் சென்றனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட கால்நடை பயனடைந்தன. உதவி மருத்துவர்கள் தேவகி, டாப்னி ஜோதி, தங்கராணி, கல்யாணி சீனிவாசன், ஜானகி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்து நடத்தினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram