Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

ராமநாதபுரத்தில் குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி 9 தாலுகாக்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணிக்கு நடக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    ரேஷன் கடை களில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்தகுடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முகாம் நடை பெறும் இடங்கள்:  ராமநாதபுரம் தாலுகா-தேர்போகி ரேஷன் கடை, ராமேசுவரம் தாலுகா-சம்பை கிராம சமுதாய கூடம், திருவாடானை தாலுகா-கீழ்பனையூர்ரேஷன்கடை, பரமக்குடி தாலுகா-கோபாலபட்டிணம் ரேஷன்கடை, முதுகுளத்தூர் தாலுகா-மேலச்சிறு போது நூலக மையக்கட்டிடம், கடலாடி தாலுகா-கடுகு சந்தை கிராம சமுதாய மடத்து கட்டிடம், கமுதி தாலுகா- து. வாலசுப்பிரமணியபுரம் ரேஷன்கடை, கீழக்கரை தாலுகா-நல்லிருக்கை கிராம சமுதாயகூடம், ஆர்.எஸ். மங்கலம் தாலுகா- ஆய்ங்குடி கிராம சமுதாய கூடம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி