ஹோம் /ராமநாதபுரம் /

செல்வமகள் சேமிப்பு திட்டம் - கணக்கு தொடங்க ராமநாதபுரத்தில் சிறப்பு முகாம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் - கணக்கு தொடங்க ராமநாதபுரத்தில் சிறப்பு முகாம்

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

Ramanathapuram District| குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  போஸ்ட் ஆபீஸில் செல்வமகள், செல்வமகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க ராமநாதபுரத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள், மற்றும் கிளை அஞ்சலகங்களில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகிற 30ஆம் தேதி வரை செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகன் சேமிப்பு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

  இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தங்களது 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திலும், ஆண் குழந்தைகளுக்கு செல்வமகன் சேமிப்பு திட்டத்திலும் கணக்கினை தொடங்கலாம்.

  எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 வைப்புத்தொகையாக செலுத்தி கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். திரட்டப்பட்ட கணக்கில் 50 சதவீதம் உயர்படிப்புக்காக திரும்பப்பெறலாம். திருமணத்தின் போது ஒரு மாதத்திற்கு முன்பே கணக்கை முடித்து விடலாம்.

  Must Read :மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

  இதேபோல பிபிஎப் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 வைப்புத்தொகையாக செலுத்தி கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டங்களுக்கான வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  எனவே, ராமநாதபுரம் பகுதியில் அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அனைத்து வகையான கணக்குகளையும் தொடங்கி பயன்பெறுமாறு கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Post Office, Ramanathapuram, Savings